குயின்ஸ்லாந்து மாநிலத்தில் வடக்கே உள்ள ஹோட்டலொன்றின் மேல்கூரையில் விமானம் மோதி விபத்துக்குள்ளானதில் விமானி பலியாகியுள்ளார்.
இன்று அதிகாலைவேளையிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து ஹோட்டலில் இருந்த நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
இரட்டை என்ஜின் கொண்ட இந்த விமானத்தில் ஒரு விமான மாத்திரமே இருந்துள்ளார் எனவும், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தையடுத்து ஹோட்டலின் மேல்கூரை பகுதியில் தீ பரவல் ஏற்பட்டது.
ஹோட்டலுக்குள் இருந்த எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை, எனினும், இச்சம்பவத்தால் அதிர்ச்சிக்குள்ளான இருவர் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்து தொடர்பில் குயின்ஸ்லாந்து பொலிஸார் மற்றும் வான் பாதுகாப்பு நிபுணர்கள் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.