அமெரிக்க பொருள்களுக்கு கனடாவில் இன்று முதல் 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடியாக அறிவித்துள்ளார்.
கனடாவின் பொருள்களுக்கு அமெரிக்கா 25 சதவீத வரியை விதித்துள்ள நிலையிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இரு நாடுகளின் இந்த அறிவிப்பு காரணமாக வர்த்தக போர் ஆரம்பமாகியுள்ளது எனக் கூறப்படுகின்றது.
வரி குறித்து பிரதமர் ட்ரூடோ விடுத்திருந்த அறிக்கையில், ' டிரம்ப் கூறிய பேச்சை கேட்டுக்கொண்டு, எங்கள் நாட்டு பொருட்களுக்கு வரியை அமெரிக்க அரசு விதித்தால், நாங்களும் வரி விதிக்க நேரிட்டுள்ளது." என்று கூறப்பட்டுள்ளது.
அமெரிக்கா விதித்துள்ள வரி மீளப்பெறப்படும்வரை, நாமும் எமது நிலைப்பாட்டை மாற்றப்போவதில்லை." எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல அமெரிக்காவிலிருந்து வரும் பல்வேறு பொருட்களுக்கு கடுமையான தரநிலையை நிர்ணயிப்போம். இது குறித்து மற்ற மாநிலங்களுடன் பேசுவோம்" எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ட்ரூடோவின் இந்த அறிவிப்பு அமெரிக்காவுக்கான பதிலடியாக பார்க்கப்படுகிறது.