சீனாவின் சங்காய் நகரிலுள்ள வணிக வளாகமொன்றில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் மூவர் பலியாகியுள்ளனர். மேலும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்றிரவே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தாக்குதல் நடத்திய 37 வயது நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நபர் நடத்திய தாக்குதலில் 18 பேர் காயமடைந்தனர். அவர்கள் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பிறகு மூவர் உயிரிழந்துள்ளனர்.
இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது.
சீனாவில் இவ்வருடம் பல கத்திக்குத்து தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.