முன்னாள் கொரிய ஜனாதிபதி யூன் சுக் இயோலை கைது செய்யும் முயற்சி யூன் சார்பு ஆதரவாளர்களின் பெரும் எண்ணிக்கையிலான எதிர்ப்பலகளினாலும் மற்றும் அவரது பாதுகாப்பு ஊழியர்களின் தடுப்புகளினாலும் சுமார் 6 மணி நேரம் நீடித்த முட்டுக்கட்டைக்குப் பிறகு கைது செய்யும் முயற்சியை காவல் துறை கைவிட்டனர்.
டிசம்பர் தொடக்கத்தில் இராணுவச் சட்டத்தை சுமத்த முயன்றபோது, தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததற்காகவும், கிளர்ச்சியைத் தூண்டியதற்காகவும் பதவி நீக்கம் செய்யபப்பட்ட யூன் விசாரணைக்கு ஆஜராகுமாறு யூன் மூன்று சம்மன்களை புறக்கணித்ததையடுத்த நிலையிலேயே இந்த வார தொடக்கத்தில் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டை செயல்படுத்த வெள்ளிக்கிழமை அதிகாலை மத்திய சியோலில் உள்ள யூனின் இல்லத்திற்கு போலீசார் முயன்றனர்.
இது குறித்து அந்நாட்டு ஊழல்துறை கருத்துத் தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதியின் கைதை காவல்துறையுனரின் பாதுகாப்புக் கருதி தற்சமயம் நிறுத்தி வைத்துள்ளோம்.
இந்த நடவடிக்கை 20 பேர் கொண்ட குழுவுடன் தொடங்கியது, ஆனால் விரைவில் 150 பேராக பெருகியது. அப்போதும் அவர்கள் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தது.
கைது செய்யும் நடவடிக்கை வெற்றி பெற்றிருந்தால், தென் கொரியாவின் வரலாற்றில் கைது செய்யப்பட்ட முதல் பதவியில் இருக்கும் அதிபர் என்ற பெருமையை யூன் பெற்றிருப்பார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிததனர் .
தற்போதைய வாரண்ட் காலாவதியாகும் முன் அவரைக் கைது செய்ய விசாரணை அதிகாரிகளுக்கு ஜனவரி 6 வரை அவகாசம் உள்ளது.
சபா.தயாபரன்.