மழை வேண்டி இரணைமடு கனகாம்பிகை அம்பாளுக்கு இளநீர் அபிஷேகம்

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

பருவமழை உரிய காலத்தில் இன்மையால் மழையை நம்பி நெற்செய்கையில் ஈடுப்பட்ட விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று 26-10-2020விசேட இளநீர் அபிஷேகம் மேற்கொள்ளப்பட்டு பூசை இடம்பெற்றுள்ளது.





கிளிநொச்சி மாவட்டத்தில் இந்த வருடம் காலபோக நெற்ச்செய்கையை விவசாயிகள் ஆரம்பித்துள்ள போதும் பருவமழை இன்மையால் விவசாயிகள் பல சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.





குறிப்பாக மழையை எதிர்பார்த்து விவசாயிகள் நெல்லைவிதைத்து ஒரு மாதம் கடந்துள்ளபோதும் மழையின்மையால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.





மாவட்டத்தில் இம்முறை சுமார் 72000 ஏக்கர் வரை விவசாயிகள் நெற்ச்செய்கையை மேற்கொண்டுள்ளனர். அதிகளவு விவசாயிகள் மழையை நம்பியே காலபோகத்தை மேற்கொள்ளுகின்றனர். மழையின்மையால் மாவட்டத்தின் பெருமளவு விவசாயிகள்
பாதிக்கப்பட்டுள்ளனர்.எனவே இன்றைய தினம் இரணைமடு கமக்காரர் அமைப்புக்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி இரணைமடு கனகாம்பிகை அம்பாளுக்கு இருநூறுக்கு மேற்பட்ட இளநீர் கொண்டு விசேட அபிசேகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.