நினைவேந்தல் குறித்து பொலிஸார் விடுத்துள்ள எச்சரிக்கை!

banner

நீதிமன்ற கட்டளையைமீறி எவராவது மாவீரர் நினைவேந்தல் நிகழ்வை நடத்தினால் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.





நாளை மாவீரர் நினைவேந்தல் நாளாகும். இந்நிலையில் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவதற்கு வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் பொலிஸார் நீதிமன்றம் ஊடாக தடை உத்தரவு பெற்றுள்ளனர்.





இந்நிலையில் இது பற்றி கருத்து வெளியிட்ட பொலிஸ் ஊடகப்பேச்சாளரும், பிரதிப்பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண கூறியதாவது,





" புலிகள் அமைப்பு இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும். பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபட்டவர்களை நினைவுகூரமுடியாது. நீதிமன்ற உத்தரவைமீறும் வகையில் எவராவது செயற்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நீதிமன்ற உத்தரவை மீறியமை உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்கு தாக்கல் செய்யப்படும். உயிரிழந்த சாதாரண மக்களை அவர்களின் உறவினர்கள் நினைகூரலாம். ஆனால் அதனை மாவீரர் நாளில் செய்வதை ஏற்கமுடியாது." - என்றார்.