'வரவு - செலவுத்திட்டம் தொடர்பான 2ஆவது அறிக்கை நாளை சபையில் சமர்ப்பிப்பு'

banner

வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் இரண்டாவது அறிக்கை நாளை (02) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.





இம்முறை வரவுசெலவுத்திட்டம் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்புடையதாக உள்ளதா என்பது இந்த அறிக்கையின் ஊடாகத் தெளிவுபடுத்தப்படும்.





குறித்த அறிக்கையின் இறுதி வரைபு குறித்து கலந்துரையாடுவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தலைமையில் அரசாங்க நிதி பற்றிய குழு நேற்று கூடியது. இதில் அரசாங்க நிதி பற்றிய குழுவின் உறுப்பினர்களான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான கலாநிதி ஹர்ஷ த சில்வா, டிலான் பெரேரா மற்றும் இசுறு தொடங்கொட ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.





கல்வி போன்று அதிக நிதி அவசியமான துறைகளில் அதிகமான முதலீடுகளை மேற்கொள்வதற்கு எதிர்கால திட்டமிடலில் வெளிநாட்டுக் க டன்களைப் பெற்றுக்கொள்ள இக்குழு இணக்கம் தெரிவித்தது. இலங்கை தொடர்பில் புதிய புள்ளிவிபரங்களை இந்த அறிக்கையில் இணைத்துக்கொள்வதற்கு இலங்கை மத்திய வங்கியின் ஒத்துழைப்பைப் பெற குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ த சில்வா சுட்டிக்காட்டினார்.