வடக்கில் இன்று மாத்திரம் 31 பேருக்கு கொரோனா

Sri Lanka 3 ஆண்டுகள் முன்

banner

வவுனியா நகர கொரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்று 31 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்றியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.





இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.





இதன்மூலம் வவுனியா நகர கொத்தணியினால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 79ஆக உயர்வடைந்துள்ளது.





வவுனியா மாவட்டத்தின் நகர்ப் பகுதியில் உள்ள பஜார் வீதி, தர்மலிங்கம் வீதி மற்றும் மில் வீதிகளில் காணப்படும் வர்த்தக நிலையங்களில் கடமை புரிபவர்களுள் 54 பேருக்கு கடந்த 8ஆம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.





இன்றைய பரிசோதனையில் 25 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.





அத்துடன், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. பல்கலைகழக விரிவுரையாளரான அவர், கடந்த வாரம் வரை 3 வாரங்கள் கொழும்பு சென்று பரீட்சை மதீப்பீட்டு பணிகளில் ஈடுபட்டு வீடு திரும்பியவர்.





காய்ச்சல் தொண்டை நோ உள்ளிட்டவற்றால் தெல்லிப்பழை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் இன்றைய பரிசோதனையில் கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது.





விரிவுரையாளர் கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்தவர்.





மேலும் பளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும் தொற்று உள்ளமை இன்று கண்டறியப்பட்டது. அவர் பூநகரியிலிருந்து கொழும்பு சென்ற நிலையில் அங்கு பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்ட நிலையிர. தப்பித்து வீடு திரும்பியவர்களில் ஒருவர்.





வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தொற்று உள்ளமையும் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.





முல்லைத்தீவு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இருவருக்கு தொற்று உள்ளமையும் இன்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.-