தடுப்பூசி ஏற்றினாலும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது அவசியம்

banner

கொரோனா தடுப்பூசி ஏற்றிக்கொண்டாலும், சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சின், சுகாதார மேம்பாட்டு மையத்தின் ஊடகப்பிரிவு அதிகாரியான வைத்தியர் தேஷானி ஹேரத் (Dr. Deshani Herath) தெரிவித்தார்.





கொவிட் - 19 தடுப்பூசியை பெற்றுக்கொண்டவர்களுக்கு, கொரோனா வைரஸ் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லையா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





“ தடுப்பூசியை பெற்றதும் எல்லா பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டது என நினைக்ககூடாது. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் அதேவேளை இதுவரை கடைபிடித்த சுகாதார பழக்கவழக்கங்களை தொடர்ந்தும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக சமூகஇடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாக கழுவுதல் போன்றவற்றை செய்யவேண்டும்.





கொவிட் – 19 தடுப்பூசியை ஏற்றினால் எதிர்காலத்தில் எவருக்கும் வைரஸ் தொற்று ஏற்படாது என்பது இன்னும் பரிசோதனைமூலம் உறுதிசெய்யப்படவில்லை. நடவடிக்கைகள் ஆய்வு மட்டத்திலேயே உள்ளன. ஆனாலும் வைரஸ் தொற்றினால்கூட பாதிப்புகளை குறைத்துக்கொள்ளலாம். எனவே, இதனை சாதகமானதாக பார்க்கவேண்டும்.” – என்றார்.