இலங்கையில் தடுப்பூசி ஏற்றியவர்களின் எண்ணிக்கை வெளியானது

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

நாட்டில் நேற்று 75ஆயிரத்து 74 பேருக்கு கொவிட் – 19 தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.57 ஆயிரத்து 706 சினோ பாம் தடுப்பூசிகளும், 17 ஆயிரத்து 368 ஸ்புட்னிக் – பை தடுப்பூசிகளுமே இவ்வாறு மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளன.அத்துடன், கொவிஷீல்ட் தடுப்பூசியின் 2ஆவது டோஸ் நேற்று ஆயிரத்து 272 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளன.





இலங்கையில் தற்போது ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V) ஆகிய தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுவருகின்றன.





இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 48ஆயிரத்து 582 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.





2021 மார்ச் 26 ஆம் முதல் ஜுன் முதலாம் திகதிவரை இலங்கையில் உள்ள 2 ஆயிரத்து 435 சீனப்பிரஜைகள் உட்பட 7 லட்சத்து 97 ஆயிரத்து 205 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 2 ஆயிரத்து 435 பேர் பெற்றுள்ளனர்.





ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. ஜுன் முதலாம் திகதிவரை 44 ஆயிரத்து 189 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இன்னும் இரண்டாவது டோஸ் ஏற்றும் பணி ஆரம்பமாகவில்லை.





நாட்டில் இன்னும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.