இலங்கையில் 2021 ஜனவரி 29 ஆம் திகதி முதல் ஜுலை 18 ஆம் திகதிவரை 56 லட்சத்து 75 ஆயிரத்து 329 பேருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இன்றும் தடுப்பூசி ஏற்றும் பணி முன்னெடுக்கப்படுகின்றது.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமும் ஆஸ்ட்ரா செனகா நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொவிஷீல்ட் (Covishield) , சீனாவின் தயாரிப்பான சினோ பாம் (Sinopharm), ரஷ்ய தயாரிப்பான ஸ்புட்னிக் – பை (Sputnik – V), பைசர், மொடர்னா ஆகிய தடுப்பூசிகள் இலங்கையில் மக்களுக்கு ஏற்றப்பட்டுவருகின்றன.
இதன்படி கொவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் 9 லட்சத்து 25 ஆயிரத்து 242 பேருக்கு ஏற்றப்பட்டுள்ளது. இவ்வாறு முதலாவது டோஸை பெற்றுக்கொண்டவர்களில் 3 லட்சத்து 85 ஆயிரத்து 885 பேருக்கு இரண்டாம் டோஸ் ஏற்றப்பட்டுள்ளது.
2021 மார்ச் 26 ஆம் திகதி முதல் ஜுலை 18 ஆம் திகதிவரை 45 லட்சத்து 34 ஆயிரத்து 165 பேருக்கு சினோ பாம் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. இதன் இரண்டாவது டோஸை 12 லட்சத்து 86 ஆயிரத்து 215 பேர் பெற்றுள்ளனர்.
ஸ்புட்னிக் – பை தடுப்பூசி ஏற்றும் பணி ஏப்ரல் 30 ஆம் திகதி ஆரம்பமானது. இதுவரை ஒரு லட்சத்து 59 ஆயிரத்து 81 பேருக்கு அந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் ஏற்றப்பட்டுள்ளது. இதில் 14 ஆயிரத்து 464 பேர் இரண்டாம் டோஸை பெற்றுள்ளனர்.
பைசர் தடுப்பூசி ஏற்றும் பணி ஜுலை 7 ஆம் திகதி ஆரம்பமானது. அதன் முதலாவது டோஸை நேற்றுவரை 46 ஆயிரத்து 753 பேர் பெற்றுள்ளனர். மொடர்னா தடுப்பூசி ஏற்றும் பணி நேற்று ஆரம்பமானது. முதலாவது டோஸ் 10 ஆயிரத்து 88 ஆக அதிகரித்துள்ளது.Paid Adhttps://www.youtube.com/embed/42WAserELY0 https://www.youtube.com/subscribe_embed?usegapi=1&channelid=UC5AfZ3GaRIJqqIqn0FUzzLw&layout=full&count=hidden&origin=https%3A%2F%2Fkuruvi.lk&gsrc=3p&ic=1&jsh=m%3B%2F_%2Fscs%2Fapps-static%2F_%2Fjs%2Fk%3Doz.gapi.en.g8agzr_oroM.O%2Fam%3DAQ%2Fd%3D1%2Frs%3DAGLTcCP6z3gW3iZ5SpDBmGgDQznnZEz5gQ%2Fm%3D__features__#_methods=onPlusOne%2C_ready%2C_close%2C_open%2C_resizeMe%2C_renderstart%2Concircled%2Cdrefresh%2Cerefresh%2Conload&id=I0_1626673883289&_gfid=I0_1626673883289&parent=https%3A%2F%2Fkuruvi.lk&pfname=&rpctoken=42332780 Share