தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி முடிவுகள்...
Sri Lanka 2 ஆண்டுகள் முன்
இலங்கை சதுரங்க சம்மேளத்தின் 'தேசிய சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி' களின் 2ஆம் கட்டமாக வடக்கு வலயத்திற்கான மேஜர் சுற்றுப்போட்டிகள் அண்மையில் நடைபெற்றன. வடக்கு வலயத்தில் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
இப்போட்டிகளில் திறந்த பிரிவில் கொக்குவில் இந்துக் கல்லாரியைச் சேர்ந்த எஸ். சிவதனுஜன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டார்.
7 சுற்றுக்களை கொண்ட இச் சுற்றுப்போட்டியில் 6 வெற்றிகள் மற்றும் 1 'Draw' உள்ளடங்கலாக 6 1/2 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன் 2வது இடத்தை யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த ஜே. ஆர்த்திகனும், 3 வது இடத்தை யாழ் இந்துக் கல்லூரியை சேர்ந்த அ.ஆருத்திரனும் பெற்றுக்கொண்டனர்.
பெண்கள் பிரிவுப் போட்டிகளில் யாழ் வேம்படி பெண்கள் பாடசாலையை சேர்ந்த பி.திஷானுகா முதலிடத்தைப்பெற்று கொண்டார். 7 சுற்றுக்களில் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றார். அத்துடன் யாழ் வேம்படி பெண்கள் பாடசாலையைச் சேர்ந்த எஸ். நர்த்தவி மூன்றாவது இடத்தைப் பெற்றுக்கொண்டார்.
Related Posts