ஹட்டனில் விபத்து - ஒருவர் பலி - மூவர் படுகாயம்

banner

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆட்டோவொன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியாகியுள்ளார். மூவர் காயமடைந்துள்ளனர்.





ஹட்டன், டிக்கோயா பகுதியிலிருந்து பெரிய மணிக்வத்தை பகுதிக்கு சென்றுக்கொண்டிருந்த குறித்த ஆட்டோவொன்று, 24.11.2021 நேற்றிரவு 7 மணியளவில் பெரிய மணிக்வத்தை தோட்டத்திற்கு செல்லும் வீதியில் வீதியை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.





டிக்கோயா பெரிய மணிக்வத்தை பகுதியை சேர்ந்த சுந்தராஜ் (வயது - 65) மூன்று பிள்ளைகளின் தந்தையே விபத்தில் பலியாகியுள்ளார்.





உயிரிழந்தவரின் சடலம் டிக்கோயா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.படுங்காயமடைந்த மூவரும் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.