குண்டர்கள் அடாவடி, பொலிஸார் நித்திரையா?

Sri Lanka 2 ஆண்டுகள் முன்

banner

(அப்துல்சலாம் யாசீம்)





கிண்ணியாவில் கடந்த 23ஆம் திகதி குறிஞ்சாக்கேணி இழுவைப் படகு விபத்தின்போது, செய்தி சேகரிப்புக்காக சம்பவ இடத்துக்கு சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.





திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்கள் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் கிண்ணியா பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இன்று (01) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றது.





கடந்த 23ஆம் திகதி கிண்ணியாவில் செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதுடன், கையடக்கத் தொலைபேசியும் களவாடப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் அன்றைய தினம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த போதிலும் இதுவரை எதுவித நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்து தாக்கப்பட்டவர்கள் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படாமையினையும் கண்டித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
.
இதன்போது ஜனநாயகத்தின் தூண்களை நெருங்காதே குண்டர்கள் சுதந்திரமாக பொலிசார் நித்திரையா? கிண்ணியா பொலிசே அமைதி காப்பது ஏன்? ஊடகவியலாளர்களை தாக்கியவர்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை? ஊடக சுதந்திரத்தில் கை வைக்காதே போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.