'1000 கைதிகளை கொலை செய்த ஐ.எஸ். பயங்கரவாதிகள்'

banner

ந. பரமேஸ்வரன்





ஐ.எஸ். தீவிரவாதிகள் 2014ஆம் ஆண்டு ஈராக்கின் மொசூல் சிறையிலிருந்த 1000 கைதிகளை - சிட்டி முஸ்லிம்களை திட்டமிட்டு கொலை செய்துள்ளதாக ஐ,நா தெரிவித்துள்ளது.





கிறிஸ்டியன் ரிட்ஸ்ச்சர் ஐ,நாவுக்கு கடந்த வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.





பதுஷ் மத்திய சிறையில் வைத்து சிரேஷ்ட ஐ.எஸ். தளபதி ஒருவரால் இந்த கொலைகள் நிகழ்த்தப்பட்டடுள்ளன. தற்போது உயிருடன் இருப்பவர்கள் அடையாளம் காட்டிய புதைகுழிகளை ஆதாரமாக வைத்து கிறிஸ்டியன் ரிட்ஸ்ச்சர் இதனை தெரிவித்துள்ளார்.





2014 ஜூன் பத்தாம் திகதி காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.





புலனாய்வாளர்கள் டிஜிட்டல் ஆவணங்கள், தற்போது வாழ்பவர்களின் மரபணு, ஐ.எஸ் தீவிரவாதிகளின் ஆவணங்கள் போன்றவற்றை ஆராய்ந்த போது ISIS,ISIL தீவிரவாத குழுக்களே இந்த கொலைகளை செய்திருப்பது தெரிய வந்ததாக கிறிஸ்டியன் ரிட்ஸ்ச்சர் கூறியுள்ளார்.





ஐ.நா புலனாய்வுக்குழுவின் முடிவின் படி ஐ.எஸ் தீவிரவாதிகளே இதகொலைகள் சித்திரவதைகள் யாவற்றுக்கும் பொறுப்பு.
யஸீதி சிறுபான்மையினரை ஐ.எஸ் தீவிரவாதிகள் இனப்படுகொலை செய்தது நிரூபணமாகியுள்ளதாக ஐ.நா புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது. இவர்கள் இரசாயன ஆயுதங்களையும் மாஸ்ட்ராட் காசையும் பாவித்துள்ளதாகவும் புலனாய்வுக்குழு தெரிவித்துள்ளது.





ஈராக், மற்றும் தற்போது குர்திஷ் பிராந்தியத்தில் தப்பி உயிர்வாழ்வோர் போன்றவர்களின் ஆதரவுடன் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அர்த்தமுள்ள நீதியை பெற்றுக்கொடுக்க முடியுமெனவும் கிறிஸ்டியன் ரிட்ஸ்ச்சர் தெரிவித்துள்ளார். கடந்த ஆறு மாதங்களில் இவர்கள் உயிர்,இரசாயன ஆயத உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் கிறிஸ்டியன் ரிட்ஸ்ச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக ரிட்ஸ்ச்சர் இந்த அறிக்கையை ஐ.நா.பாதுகாப்புச்சபைக்கு சமர்ப்பிக்கவுள்ளார்.