20 நாடுகள் தலிபான்களிடம் கூட்டாக விடுத்துள்ள கோரிக்கை

World 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





தலிபான்கள் தமது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டுமென அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன்,ஜப்பான் உள்ளிட்ட இருபது நாடுகள் தாலிபான்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.





கடந்த ஓகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய போது முன்னாள் படை வீரர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தனர்.





ஆனால் தலிபான்கள் வழங்கிய வாக்குறுதியை மீறி சரணடைந்த படை வீரர்களையும் அரச அதிகாரிகளையும் கொலை செய்து வருவதாகவும் காணாமல் ஆக்கப்படுவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.





இதனையடுத்தே அமெரிக்கா,ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன்,ஜப்பான் உள்ளிட்ட இருபது நாடுகள் தலிபான்கள் தமது வாக்குறுதியை காப்பாற்ற வேண்டுமெனவும் சரணடைந்த படை வீரர்களுக்கும் அரச அதிகாரிகளுக்கும் பழைய பதவிகள் மீண்டும் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளன.





மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பாக முழுமையான வெளிப்படைத்தன்மையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் மேற்படி நாடுகள் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக தலிபான்களின் நடவடிக்கையை தாங்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் இந்த இருபது நாடுகளும் தெரிவித்துள்ளன.