அமெரிக்காவில் சூறாவளி - பலர் பலி

World 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் ஏற்பட்ட கடுமையான சூறாவளிக்காற்று காரணமாக 50-70 பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாமென அஞ்சப்படுகிறது. இறந்தவர்களின் எண்ணிக்கை நூறு வரை அதிகரிக்கலாமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





அமெரிக்காவிலுள்ள மாநிலங்கள் பலவற்றை சூறாவளி தாக்கியுள்ளது, இல்லினோயிஸ் மாநிலத்திலுள்ள அமேசன் களஞ்சியசாலையின் கூரை தகர்ந்து வீழ்ந்ததில் ஒருவர் இறந்துள்ளதுடன் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.





90 நிமிடங்களின் பின்னர் துப்பரவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அடித்தளத்தில் பலர் சிக்கியிருக்கலாமென அஞ்சப்படுகிறது. எத்தனை பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற விபரம் இன்னும் சரியாகத்தெரியவில்லை. களஞ்சியசாலை ஊழியர்கள் பலர் பற்றிய விபரங்கள் தெரியவில்லை.





வெள்ளிக்கிழமை இரவு இந்த கடுமையான சூறாவளி அமெரிக்காவை உலுப்பியுள்ளது. இதனையடுத்து கென்டகி மாநிலத்தில் அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.





புகையிரதம் ஒன்று தடம்புரண்டுள்ளது. காணாமல் போனதாக கருதப்பட்ட இரு சிறுவர்கள் தண்ணீர் தொட்டியிலிருந்து (பாத்டப்) மீட்கப்பட்டுள்ளனர்.ஆர்கன்சாஸ்,மிசூரி, ரென்னசீ மாநிலங்களுக்கும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.