தென்னாபிரிக்க ஜனாதிபதிக்கு 'ஒமிக்ரோன்' தொற்று?

banner

ந. பரமேஸ்வரன்





தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷாவுக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் அறிவித்துள்ளது.





69 வயதான சிறில் ரமபோஷா முழுமையான தடுப்பூசி பெற்றுள்ளார். எனினும் அவருக்கு சிறியளவிலான தொற்று ஏற்பட்டுள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இராணுவ சுகாதாரப்பிரிவினர் அவரை கவனித்து வருகின்றனர்.





ரமபோஷாவுக்கு ஏற்பட்டது கொவிட் தொற்றா ஓமைக்ரோன் தொற்றா என்பதை ஜனாதிபதி அலுவலகம் தெரிவிக்கவில்லை.
ரமபோஷாநைஜீரியா, செனகல் ஆகிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். ரமபோஷாவின் குழுவைச்சேர்ந்த சிலருக்கு நைஜீரியாவில் தொற்று இனங்காணப்பட்டது.





ரமபரோஷாவுக்கு செனகலில் தொற்று இனங்காணப்பட்டது. இதனையடுத்து கடந்த எட்டாம் திகதிரமபரோஷா நாடு திரும்பியிருந்தார். தென்னாபிரிக்காவில் 29% மக்க ளிடையே தொற்று இனங்காணப்பட்டுள்ளதாக அல் ஜசீரா நிருபர் தெரிவித்துள்ளார்.