நீதிமன்றில் குண்டு வெடிப்பு - பஞ்சாப்பில் பயங்கரம்

India 2 ஆண்டுகள் முன்

banner

ந. பரமேஸ்வரன்





வட இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள லூதியானா நகரத்தில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த குண்டு வெடிப்பில் குறைந்தது இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.





வியாழன் (இன்று) காலை நடந்த குண்டுவெடிப்பில் நீதிமன்ற வளாகத்தில் உள்ள கழிவறையின் சுவர்கள் சேதமடைந்துள்ளதுடன் மற்ற அறைகளில் கண்ணாடி உடைதுள்ளது.பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, அரசாங்கம் எச்சரிக்கையுடன் இருப்பதாகவும், விசாரணையை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியுள்ளார்.





ட்விட்டர் பதிவில் வெடிப்பு குறித்துஅவர் தனது தனது கவலையினை வெளியிட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு செல்வதாகவும் கூறினார்.





குற்றவாளிகள் தப்ப முடியாது என்று நான் மாநில மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்று அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.. மாநிலத்தின் அமைதியையும், நல்லிணக்கத்தையும் சீர்குலைக்க யாரேனும் முயன்றால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.