தேவாலயத்துக்குள் கல்லறை - ஆய்வுக்கு விசேட குழு!

banner

வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையை ஆய்வு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தொல்பொருள் திணைக்களம் பணிப்பாளர் நாயகம் சிரேஷ்ட பேராசிரியர் அனுர மனதுங்க தெரிவித்தார்.





" கண்டுபிடிக்கப்பட்ட கல்லறையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் அந்த இடத்திலேயே வைத்திருப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.





தேவாலய அருட்தந்தையின் விருப்பிற்கு இணங்க குறித்த கல்லறையை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது." - என்றும் அவர் கூறினார்.





300 வருட வரலாற்றை கொண்ட வென்னப்புவ – போலவத்த பரலோக அன்னை தேவாலயமானது பலருடைய நன்மதிப்பினையும் பெற்ற தேவாலயமாக கருதப்படுகின்றது.





தேவாலயத்தின் கட்டட நிர்மாணப் பணிகளின் போது குறித்த கல்லறை கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.