'ராஜபக்ச ஆட்சியை ஆபிரிக்காவுடன் ஒப்பிட்ட சந்திரிக்கா'

banner

” ஆபிரிக்காவிலுள்ள சில ஏகாதிபத்திய நாடுகளில் நடப்பதுபோல்தான் தற்போது இலங்கையிலும் நடக்கின்றது.” – என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் விமர்சித்துள்ளார்.





அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக தற்போதைய ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்று அழைக்கப்பட்டிருந்தார். அவரிடம் மூன்று மணிநேரம் வாக்குமூலம் பெறப்பட்டது.





அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட சந்திரிக்கா அம்மையார்,





” இவர்கள் (ஆட்சியாளர்கள்) அனைத்து தவறுகளையும் செய்துவிட்டு தற்போது நல்லவர்கள்போல் செயற்பட்டுவருகின்றனர். அவர்கள் இழைந்த தவறுகளை, குற்றங்களை சுட்டிக்காட்டியவர்களை, குற்றவாளிகளாக்குவதற்கான முயற்சி இடம்பெற்றுவருகின்றது.





நியாயமான விசாரணைகளின் பின்னர் யாராவது, தவறிழைத்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு அவர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டால் அல்லது வழக்கு தொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுவந்தால், தான் பழிவாங்கப்பட்டுள்ளதாகக்கூறி, விசாரித்தவர்களை தண்டிப்பது உலகில் வேறு எங்கும் நடக்காது.





சர்வாதிகாரிகள் உள்ள ஒரு சில ஆபிரிக்க நாடுகளிலேயே இப்படி நடக்கும்.” – என்றார்.