அடாவடியில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிமீது வழக்கு பதிவு

Australia 2 ஆண்டுகள் முன்

banner

மெல்பேர்ணில் நடைபெற்ற போராட்டத்தின்போது பொது மகன் ஒருவரை தாக்கி, அடாவடியில் ஈடுபட்டார் எனக் கூறப்படும் பொலிஸ் அதிகாரிமீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.





பொது முடக்கம் மற்றும் தடுப்பூசி ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த வருடம் செப்டம்பர் 22 ஆம் திகதி மெல்பேர்ண் நகரில் போராட்டங்கள் வெடித்திருந்தன.





அன்றையதினம் மெல்பேர்ண் பிளிண்டர்ஸ் வீதி ரயில் நிலையத்தில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஒருவரை கைது செய்ய முயன்றவேளை பொலிஸார ஒருவர் மூர்க்கத்தனமாக செயற்பட்டார் என குற்றம் சாட்டப்பட்டிருந்தது.





“ போரட்டத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் வேறொரு பொலிஸாருடன் பேசிக்கொண்டிருக்கையில் மற்றொரு பொலிஸார் பாய்ந்துச்சென்று, குறித்த போராட்டக் காரரை நிலத்தில் அதிரடியாக வீழ்த்தி அடிப்பது போல் இருக்கும் வீடியோ அந்த நேரத்தில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.





விக்டோரியா காவல்துறை மற்றும் சுதந்திர ஊழல் எதிர்ப்பு ஆணையம் நடத்திய கூட்டு விசாரணையைத் தொடர்ந்து, அந்த அதிகாரி சட்டவிரோதமாகச் செயல்பட்டார் என்று முடிவு செய்யப்பட்டது.





பொறுப்பற்ற முறையில் காயம் ஏற்படுத்துதல், சட்டவிரோதமான தாக்குதல் மற்றும் பொது சட்டத்தை மீறுதல் போன்ற பிரிவின் கீழ் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.