'கொரோனா'வால் ஒலிம்பிக் தீப ஓட்டம் சுருக்கம்…

Community 2 ஆண்டுகள் முன்

banner

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் பெப்ரவரி 4ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கான ஒலிம்பிக் தீப ஓட்டம் மூன்று தினங்கள் மட்டுமே நடைபெறும் என சீனா அறிவித்துள்ளது.





கொரோனா அச்சம் காரணமாகவே இந்த ஏற்பாடு என ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.





இதற்காக பொதுப்போக்குவரது வீதிகள் மூடப்பட மாட்டாது எனவும் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படாத வகையிலேயே ஒலிம்பிக் தீப ஓட்டம் இடம்பெறும் எனவும் சீனா அறிவித்துள்ளது.





பாதுகாப்புக்கு முதலிடம் அளிக்கப்பட வேண்டும். ஒரு புறம் கொரோனா அச்சம் மறுபுறம் பீஜிங்கின் கடும் வெப்பமான காலநிலை காரணமாக காட்டுத்தீ அச்சம் என்பவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டியுள்ளதாக பீஜிங்கின் உதவி விளையாட்டுத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.





தெரிவு செய்யப்பட்ட பார்வையாளர்களே அழைக்கப்பட்டுள்ளதாகவும் ஊடகவியலாளர்களும் விளையாட்டு வீரர்களும் பொதுமக்களுடன் நெருங்கிப்பழக அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் சீனா தெரிவித்துள்ளது.





ஒலிம்பிக் தீப ஓட்டத்தில் பங்குபற்றுபவர்கள் இரண்டு வாரங்களுக்கு முன்பிருந்தே உன்னிப்பாக கவனிக்கப்படுவார்கள். அத்துடன் உரிய சுகாதார நடைமுறைகளும் பின்பற்றப்படும் எனவும் உதவி விளையாட்டுத்துறை பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
பீஜிங்கில் முதலாவது ஓமைக்ரோன் தொற்று ஜனவரி 15ம் திகதி அடையாளம் காணப்பட்டது; 20ம் திகதி வரை 11 தொற்றாளர்கள் அடையளாம் காணப்பட்டுள்ளனர். பீஜிங்கிற்கு வெளியே கோடிக்கணக்கான மக்கள் கொரோனா பாதுகாப்பு கருதி முடக்கப்பட்டுள்ளனர்.





2008ம் ஆண்டு கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்ற போது சீனாவின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் ஒலிம்பிக் தீபம் மத்தியில் எடுத்து வரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.