'பணியாளர்களுக்கு கொரோனா - ஆஸியில் பிணவறையில் குவியும் சடலங்கள்'

banner

ஆஸ்திரேலியா தொழிலாளர் பற்றாக்குறையால் திண்டாடிவருவதை பல அங்காடிகளில் நிலவும் பொருள்களின் தட்டுப்பாடுகளின் ஊடாகவும் காணமுடிகின்றது. அதற்கான காரணம் நாளாந்தம் அதிகரித்துச்செல்லும் ஒமிக்கிரோனின் தாக்கமே.





குறிப்பாக ஆஸ்திரேலியாவில் இறந்தவர்களின் உடல்களை, பழுதடையாமல் - பாதுகாப்பாக வைப்பதற்கான பிணவறைகள் இன்றியும் திணடாடுவருகின்றது.





தகனசாலைகள் மற்றும் இடுகாடுகளில் வேலைகளில் ஈடுபடும் பணியாளர்கள், கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகல் வேலைசெய்வதற்கு ஆட்கள் இல்லாமையால் பல உடல்கள் தேங்கிகிடக்கின்றன.





அத்துடன் பல உடல்கள் வைப்பதற்கு அறைகள் இல்லை. இந்நிலை மேலும் மோசமடையலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.





" பணியாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், சடலங்கள் குவிந்துள்ளன. அவற்றை எமது சக போட்டி நிறுவனங்களிடம் கையளித்துவருகின்றோம். அத்துடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்கள் இறுதிச் சடங்குகளுக்காக இரண்டு வாரங்கள் வரை காத்திருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. புதைக்கப்பட்ட இடங்களைக் கண்டறிவதில் நீண்ட கால தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.





இறுதிச் சடங்குகள், பிணவறை, தகனம் மற்றும் கல்லறைச் சேவைகளுக்கான தனிமைப்படுத்தல் விதிகளில் மாற்றங்களை கொண்டுவரவேண்டும். அவர்களை முன்னிலை களப்பணியாளர்களாக அடையாளப்படுத்த வேண்டும் என ஆஸ்திரேலிய இறுதிச் சடங்கு இயக்குநர்கள் சங்கம் குயின்ஸ்லாந்து மாநில அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளது.