ரஷ்யாமீது அவுஸ்திரேலியா மேலதிக தடை விதிப்பு

Australia 2 ஆண்டுகள் முன்

banner

அவுஸ்திரேலியா, ரஷ்யா மீது மேலதிக தடைகளை விதித்துள்ளது. இதன் பிரகாரம் இராணுவத்துடன் தொடர்புடைய 25 பேருக்கு அவுஸ்திரேலியா தடை விதித்துள்ளது.





இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள், மற்றும் இராணுவ தளபாட தொழில்நுட்ப விற்பனையில் ஈடுபட்டுள்ள கூலிப்படையினர் ஆகியோருக்கே இவ்வாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது.





ரஷ்யா சர்வதேச சட்டங்களையும் ஐ.நா சாசனத்தையும் மீறியுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொறிசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.





ரஷ்ய நாடாளுமன்றத்துடன் தொடர்புடைய 300 பேருக்கு தடை விதிக்கப்படலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த தடைகள் ரஷ்யாவுக்கு ஒரு தெளிவான செய்தியை சொல்கின்றன எனவும் மொறிசன் தெரிவித்துள்ளார்.