மின் கம்பத்துடன் மோதியது மோட்டார் சைக்கிள் - இளைஞன் பலி!
Sri Lanka 1 வருடம் முன்
யாழ்ப்பாணம் கொடிகாமம், பருத்தித்துறை வீதீயில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார்.
வடமராட்சி துன்னாலை பகுதியை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் வயது 27 என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வரணி பகுதியில் இருந்து மந்திகை நோக்கி, கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த வேளை , மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியோரமாக நின்ற மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
Related Posts