மின்சார கட்டண பட்டியலை வீதியில் வீசியவருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம்!

Sri Lanka 1 வருடம் முன்

banner

மின்சார கட்டண பட்டியலை, வீதியில் எறிந்த நபருக்கு ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தால் 10 ஆயிரம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  





ஹட்டன்,  ஹிஜிராபுர பகுதியை சேர்ந்த குறித்த நபர், நீதிமன்றத்தில் நேற்று  குற்றத்தை ஒப்புக்கொண்ட நபருக்கு இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டது.





ஹட்டன்-டிக்கோய நகரசபை சுகாதார பரிசோதகர் ஆர்.ஆர்.எஸ். மெதவலவால்,  சந்தேக நபருக்கு எதிராக சுற்றாடல் சட்ட விதிகளின் கீழ்  வழக்கு தொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.