வயதெல்லையில் மாற்றம் - 25 ந்து 21 ஆகிறது!

Sri Lanka 1 வருடம் முன்

banner

பணிப்பெண்கள் மற்றும் அது தொடர்பான தொழில்களுக்கு வெளிநாடு செல்லும் இலங்கை பெண்களின் வயதில்லை 21 ஆக மாற்றியமைக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.





பணிப்பெண்களாக சவுதி அரேபியாவுக்கு செல்லும் பெண்களின் வயதில்லை 25 ஆகவும் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளுக்கு 23 ஆகவும் ஏனைய நாடுகளுக்கு 21 ஆகவும் இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.





இந்த வயதெல்லையை 21 ஆக மாற்றியமைக்க தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அமைச்சரவைக்கு சமர்ப்பித்திருந்த பத்திரத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.