வவுனியாவில் கரடியின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.
வவுனியா புளியங்குளம் கல்மடு காட்டுப்பகுதியில் இடம்பெற்றுவரும் மரக்கடத்தலினை முறியடிக்கும் நோக்கில் பொலிஸ் சார்ஜன்ட் தலைமையிலான குழு சென்ற வேளையிலேயே இவர் கரடி தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.