ஆஸி. அணிக்கு ஆறுதல் வெற்றி!
Sports 1 வருடம் முன்
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கிடையிலான 5ஆவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றுள்ளது. எனினும், 3-2 என்ற அடிப்படையில் ஒருநாள் தொடரை இலங்கை அணி கைப்பற்றியுள்ளது.
5 ஆவது ஒருநாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி, 43.1 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை பெற்றது.
சமீக கருணாரத்ன 75 ஓட்டங்களையும், குசல் மெண்டிஸ் 26 ஓட்டங்களையும் பெற்றனர்.
பின்னர் 161 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய ஆஸி. அணி 39.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
ஆட்ட நாயகனாக கருணாரத்னவும், தொடராட்ட நாயகனாக குசல் மெண்டிசும் தெரிவுசெய்யப்பட்டனர்.
5 போட்டிகளை கொண்ட ஒரு நாள் தொடரை 3-2 என்ற அடிப்படையில் இலங்கை கைப்பற்றியுள்ளது.
Related Posts