பொருளாதார நெருக்கடியால் இணைய மறுக்கும் ஈருள்ளங்கள்!

banner

2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த காலகட்டத்தில் திருமண பதிவு 85 சதவீதம் குறைவடைந்துள்ளது என அகில இலங்கை பிறப்பு மற்றும் இறப்பு பதிவாளர் சங்கத்தின் இணைச்செயலாளர் சுசந்தா ஹேமஸ்ரீ ரணசிங்க தெரிவித்துள்ளார்.





நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் திருமணங்கள் குறைவதற்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.





இம்மாதத்தில் திருமண முகூர்த்தங்கள் அதிகமாக காணப்படுவதுடன், ஏனைய வருடங்களில் இம்மாதத்தில் திருமணத்திற்காக மண்டபங்களை ஒதுக்கிக் கொள்ள முடியாதநிலை ஏற்படும். ஆனால் இந்த வருடம் திருமணங்கள் வெகுவாக குறைந்துள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.