பஸ் கட்டணம் குறைப்பு!

banner

சாதாரண பஸ் கட்டணம் இன்று (04) நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளது என தேசிய போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.





அதற்கமைய, குறைந்தபட்ச பஸ் கட்டணம் 38 ரூபாவிலிருந்து 34 ரூபா வரை குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா குறிப்பிட்டார்.





பஸ் கட்டண குறைப்பிற்கு போக்குவரத்து அமைச்சின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





COVID காலப்பகுதியில் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அமைய மாத்திரம் பயணிகள் ஏற்றிச்செல்லப்பட்டமையால், 20% பஸ் கட்டண அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் தற்போது வழமை போல் அதிகளவான பயணிகள் ஏற்றிச்செல்லப்படுவதால், சாதாரண பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.





இதனிடையே, ஆகஸ்ட் முதலாம் திகதியிலிருந்து டீசல் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.





இந்த விடயங்களை ஆராய்ந்து, உள்ளக மற்றும் வௌி மாவட்டங்களுக்கான சாதாரண பஸ் போக்குவரத்து கட்டணம் இன்று நள்ளிரவு முதல் 11.14 வீதத்தால் குறைக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து சபையின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா சுட்டிக்காட்டினார்.