சமையல் எரிவாயு விலை குறைப்பு!

banner
இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிற்றோ சமையல் எரிவாயுவின் விலை குறைக்கப்பட்டுள்ளது.

இதன்படி 12.5 கிலோ லிற்றோ சமையல் எரிவாயு விலை 271 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 4280 ரூபாவாக நிர்ணயிக்கப்படடுள்ளது.

5 கிலோகிராம் லிற்றோ எரிவாயுவின் விலை 107 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது. அதன் புதிய விலை 1720 ரூபாவாகும்.

அத்துடன், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு கொள்கலனின் விலை 48 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் ,புதிய விலை 800 ரூபாவாக குறைந்துள்ளது.