புதிய அரசமைப்பு எவ்வாறு அமைய வேண்டும்? பொதுமக்களிடம் கருத்து கோரல்

Politics 3 ஆண்டுகள் முன்

banner

புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான சட்டமூலத்தை உருவாக்குவதற்கு பொது மக்களிடமிருந்து நீதி அமைச்சு கருத்து, முன்மொழிவு, யோசனைகளைக் கோரியுள்ளது.இதன்படி தமிழ், சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகிய ஏதேனுமொரு மொழியில் எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதிக்கு முன்னர் மேற்படி யோசனைகளை, கருத்துகளை பதிவுத் தபாலில் அல்லது மின்னஞ்சல் ஊடாக அனுப்பிவைக்கமுடியும்.





அரசின் தன்மை, அடிப்படை உரிமை, மொழி, அரசக்கொள்கையை வழிநடத்தும் கோட்பா, , நிறைவேற்று அதிகாரம், சட்டவாக்கம், மக்கள் கருத்துக்கணிப்பு வாக்கெடுப்பு ( வாக்குரிமை, தேர்தல்), அதிகார பரவலாக்கல் – அதிகாரப்பகிர்வு, நீதிமன்றம், அரச நிதி, மக்கள் பாதுகாப்பு, ஏனைய விடயங்கள் என 12 தலைப்புகளின்கீழ் யோசனைகளை முன்வைக்கமுடியும்.





Secreatary, Experts committee to draft a new constitution Room No, 32 (Block 02) BMIC, Bauddhaloka Mawatha, colombo 7 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்கமுடியும். அவ்வாறு இல்லாவிட்டால் expertscommpublic@yahoo.com என்ற மின்னஞ்சலுக்கும் யோசனைகளை அனுப்பிவைக்க முடியும் என நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.





மேலதிக தகவல்கள் நீதி அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது. www.moj.gov.lk