இரட்டை குடியுரிமையை எதிர்த்த விமல்மீது தாக்குதல்?

Politics 3 ஆண்டுகள் முன்

banner

" என்மீது எவரும் தாக்குதல் நடத்தவில்லை. கடும் வாய்த்தர்க்கமே ஏற்பட்டது." - என்று அமைச்சல் விமல்வீரவனஸ தெரிவித்தார்.





தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கும், ஆளுங்கட்சி எம்.பி. ஜயந்த கெட்டகொடவுக்குமிடையில் நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து நேற்று அடிதடி ஏற்பட்டுள்ளது.





அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தச்சட்டமூலத்திலுள்ள இரண்டைக்குடியுரிமைக்கொண்டவர்கள் நாடாளுமன்றம்வர முடியும் என்ற சரத்தை நீக்குமாறு அரசாங்கத்துக்கு தேசிய சுதந்திர முன்னணி கடும் அழுத்தம் கொடுத்துவருகின்றது.





இந்நிலையில் 20 இற்கு ஆதரவாக வாக்களிக்குமாறு தேசிய சுதந்திர முன்னணியின் எம்.பிக்களுக்கு, பஸில் ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமான - தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பட்ட ஜயந்த கெட்டகொட அழுத்தம் கொடுத்துள்ளார். பேரமும் பேசியுள்ளார்.





இது தொடர்பில் கட்சி உறுப்பினர்கள் தலைவர் விமல்வீரவன்சவுக்கு தெரியப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து ஜயந்த கெட்டகொடவுக்கு எதிராக பிரதமர் மஹிந்த ராஜபக்சவிடம் விமல்வீரவன்ஸ இன்று முறைப்பாடு செய்துள்ளார்.





அவ்வாறு செய்துவிட்டுவரும்வழியில் ஜயந்தகெட்டகொடவை கண்டபோதே இருவருக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.





இந்நிலையிலேயே தாக்குதல் நடத்தப்படவில்லை என விமல் குறிப்பிட்டுள்ளார்.