8 எதிரணி எம்.பிக்கள் '20' இற்கு ஆதரவு!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்கள் நால்வர் உட்பட எதிரணி உறுப்பினர்கள் 8 பேர் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியுள்ளனர்.





ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் டயானா கமகேயும் '20' ஐ ஆதரித்து வாக்களித்துள்ளார். அத்துடன் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரும் அரசாங்கத்துக்கு சார்பாக வாக்களித்துள்ளார்.





  1. டயானா கமகே – ஐக்கிய மக்கள் சக்தி
  2. நஸீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ்
  3. ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் – முஸ்லிம் தேசிய கூட்டணி
  4. பைசல் காசீம் – முஸ்லிம் காங்கிரஸ்
  5. ஹாரீஸ் – முஸ்லிம் காங்கிரஸ்
  6. தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸ்
  7. அரவிந்தகுமார் – தமிழ் முற்போக்கு கூட்டணி
  8. இஷாக் ரஹ்மான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்