கை கொடுத்தது மு.கா.! '20' இல் ஆளுங் கூட்டணிக்கு வெற்றி!!

banner

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலம் திருத்தங்கள் சகிதம் மூன்றிலிரண்டு பெரும்பான்டையுடன் நாடாளுமன்றத்தில் சற்றுநேரத்துக்கு முன்னர் நிறைவேற்றப்பட்டது.





இறுதி வாக்கெடுப்பில் (மூன்றாம் வாசிப்பு) 20 இற்கு ஆதரவாக 156 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர். மைத்திரிபால சிறிசேன வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை.





ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் எம்.பிக்கள் நால்வர் ஆதரித்து வாக்களித்த அதேவேளை ரிஷாட் பதியுதீன் ’20’ இற்கு எதிராக வாக்களித்தார். எனினும், ரிஷாட் பதியுதீனின் கட்சி உறுப்பினர்கள் இருவர் ’20’ இற்கு சார்பாக வாக்களித்தனர்.





’20’ இற்கு ஆதரவாக வாக்களித்த எதிரணி எம்.பிக்கள்





டயானா கமகே – ஐக்கிய மக்கள் சக்தி
நஸீர் அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ்
ஏ.ஏ.எஸ்.எம். ரஹீம் – முஸ்லிம் தேசிய கூட்டணி
பைசல் காசீம் – முஸ்லிம் காங்கிரஸ்
ஹாரீஸ் – முஸ்லிம் காங்கிரஸ்
தௌபீக் – முஸ்லிம் காங்கிரஸ்
அரவிந்தகுமார் – தமிழ் முற்போக்கு கூட்டணி
இஷாக் ரஹ்மான் – அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்