தலைவரின் அனுமதியுடனேயே '20' ஐ ஆதரித்தோம் - மு.கா. எம்.பி. தகவல்

banner

கட்சித் தலைவரின் அனுமதியுடனேயே 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவளித்தோம் - என்று ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தெரிவித்தார்.





20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்தமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" 20ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பில் கட்சி உயர்பீடம் கலந்துரையாடியது, மனசாட்சியின் பிரகாரம் வாக்களிப்பதற்கான அனுமதியை தலைவர் வழங்கியிருந்தார். அதற்கமையவே நாம் வாக்களித்தோம். இது தெரியாமல் - புரியாமல் கட்சி செயலாளர் அறிக்கை விடுத்துள்ளார்.





கட்சியின் முடிவுக்கு எதிராக நாம் செயற்பட்டிருந்தால் எமக்கு எதிராக தலைவர் நடவடிக்கை எடுக்கலாம். அவ்வாறு அவர் எடுக்காததில் இருந்தே, நாம் கட்சிமுடிவை மீறவில்லை என்பது உறுதியாகியுள்ளது. கட்சி தலைவருடன் எமக்கு எவ்வித பிரச்சினையும் இல்லை, நாம் சுமூகமாகவே இருக்கின்றோம். 20 இற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததால் அதற்கு ஆதரவாக வாக்களிக்கமுடியாதநிலை தலைவருக்கு ஏற்பட்டது." - என்றார்.