'ஹக்கீம், ரிஷாட்டுடன் இணைந்து பயணிக்க முடியாது'

banner

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் ஹக்கீம், ரிஷாட் ஆகியோரின் கட்சிகளுடன் இணைந்து பயணிக்கமுடியாத நிலை ஏற்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.





" அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு எதிராக ரவூப் ஹக்கீம் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவரே முன்னிலையாகி வாதாடினர். ஆனால் அவரின் கட்சி உறுப்பினர்கள் '20' இற்கு ஆதரவு வழங்கியுள்ளனர். அவர்களுக்கு எதிராக கட்டாயம் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ஹக்கீமும், ரிஷாட்டும் நாடகமாடுகின்றனர் என்ற சந்தேகமும் எழும்.





அதுமட்டுமல்ல அவர்களின் கட்சிகளுடன் இணைந்து செயற்படமுடியாத நிலையும் ஏற்படும். 20 இற்கு ஆதரவாக வாக்களித்த அரவிந்தகுமார் எம்.பிக்கு தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கை எடுத்துள்ளதை வரவேற்கின்றோம்." - என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.