அமெரிக்க தூதரகத்தை சுற்றிவளைத்த ஜே.வி.பி.!

Politics 3 ஆண்டுகள் முன்

banner

கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகத்துக்கு முன்பாக ஜே.வி.பியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.அமெரிக்க இராஜாங்கச்செயலாளரின் இலங்கை பயணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தே இந்த எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தனர்.





'இலங்கைமீது வெளிநாட்டு அழுத்தம் வேண்டாம்' என இதன்போது போராட்டக்காரர்களால் கோஷம் எழுப்பட்டது.ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், முன்னாள் எம்.பி., சுனில் ஹந்துன்நெத்தி உள்ளிட்ட ஜே.வி.பி. ஆதரவாளர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.





அதேவேளை, அமெரிக்க தூதரகத்திடம் கடிதமொன்றையும் ஜே.வி.பி. கையளித்தது.அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோவின் விஜயத்தை சக்தி மிக்க சுயாதீன மற்றும் ஜனநாயக இலங்கைக்கான அர்ப்பணிப்பிற்காக மேற்கொள்ளும் விஜயமாக தாம் கருதவில்லை என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.





இலங்கை அமெரிக்காவின் அழுத்தத்திற்குள் அடிபணிந்து நாட்டை அத்தியாவசியமற்ற, அதிக கேள்விக்குள்ளான பூகோள மற்றும் பிராந்திய சக்தியொன்றுக்குள் தள்ளுவதற்கு அமெரிக்கா தொடர்ந்தும் முயற்சித்து வருவதாகவும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.