இலங்கைக்கு எதிராக இராஜதந்திரச் சமரை முன்னெடுக்குமா அமெரிக்கா?

Politics 3 ஆண்டுகள் முன்

banner

இலங்கையை பகைத்துக்கொள்ளும் விதத்தில் அமெரிக்காவின் நகர்வுகள் ஒருபோதும் இருக்காது என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு இன்று அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.





இதன்போது அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கை பயணம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.





" பூகோள அரசியலில் பலம்பொருந்திய நாடுகளுக்கு இலங்கை முக்கியத்துவமிக்க நாடாகும். இலங்கையுடன் நட்புறவுடன் செயற்படுவதே சிறப்பு என அமெரிக்க இராஜாங்க செயலகத்துக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, அந்நாடு முரண்படும் விதத்தில் செயற்படாது.





அமெரிக்க இராஜாங்க செயலாளர் இங்குவரும்போது எம்சீசீ உடன்படிக்கையில் கைச்சாத்திடப்படமாட்டாது, இரு நாடுகளும் இணங்கவேண்டும். அதற்கு இலங்கை தயாரில்லை. அமெரிக்காவும் அழுத்தம் கொடுக்காது என நம்புகின்றோம்." என்றும் கம்மன்பில குறிப்பிட்டார்.