'ஜனாதிபதி முறைமையை ஒழிக்க விமலின் கட்சி ஆரவு'

Politics 3 ஆண்டுகள் முன்

banner

13ஆவது திருத்தத்தின் காரணமாகவே நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை தொடர்ந்து வைத்திருக்க வேண்டியுள்ளது. 13 ஆவது திருத்தம் இல்லாத அரசியலமைப்பின் கீழ் ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதற்கோ மாற்றுவதற்கோ தேசிய சுதந்திர முன்னணிக்கு எதிர்ப்பு கிடையாதென அக்கட்சி அறிவித்துள்ளது.





புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் நிபுணர் குழுவிற்கு 23 அம்ச யோசனையொன்றை அக்கட்சி கையளிக்க உள்ளது.





ஜனாதிபதி தேர்தல் நடத்துவதானால் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலைப்போன்ற முறையில் அது நடைபெற வேண்டுமெனவும் நாடாளுமன்றத் தேர்தலையும் ஜனாதிபதி தேர்தலையும் ஒரே நாளில் நடத்த வேண்டுமெனவும் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி யோசனை முன்வைத்துள்ளது.





புதிய அரசியலமைப்பு தயாரிக்கும் குழுவிற்கு இந்த யோசனைகளை முன்வைக்க இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணி தேசிய அமைப்பாளர் ராஜாங்க அமைச்சர் ஜெயந்த சமரவீர தெரிவித்தார்.