இலங்கைக்கு எதிராக மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை?

Politics 3 ஆண்டுகள் முன்

banner

" ஜெனிவா தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியுள்ளதால் எதிர்வரும் மார்ச்சில் மற்றுமொரு பிரேரணை முன்வைக்கப்படும் என பிரிட்டன் நாடாளுமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்." - என்று எதிரணி பிரதம கொறடாவான லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார். 





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" போர் முடிவடைந்த பின்னர் ஐ.நா. செயலாளரிடம் உள்ளக விசாரணைக்கு அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உடன்பட்டிருந்தார். அந்த உறுதிமொழி நிறைவேற்றப்படாததால் இலங்கைக்கு எதிராக தொடர்ச்சியாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், பொருளாதார தடைக்கும் சர்வதேச தயாராகின.

இந்நிலையில்தான் நாம் உள்ளக விசாரணைக்கு உட்பட்டோம். ஆனால் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையில் இருந்து இந்த அரசு விலகியுள்ளது. இது ஏற்புடைய நடவடிக்கை அல்ல என நான் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

உள்ளக விசாரணைக்கான உறுதிமொழியில் இருந்து விலகியுள்ளதால் அடுத்த மார்ச்சில் யோசனையொன்றை முன்வைப்பதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக பிரிட்டன் நாடாளுமன்றத்தில் கடந்த 25 ஆம் திகதி தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்  அரசாங்கம் கவனம் செலுத்தவேண்டும். நடவடிக்கை எடுக்கவேண்டும். ஏனெனில் 2015 இற்கு முன்னர் இருந்த நிலை தெரியும்தானே? " என்றார்.