'ஜனாதிபதி ஆணைக்குழு கண்துடைப்பு நாடகம்'

banner

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்ய புதிய ஆணைக்குழுவொன்று நியமிக்கப்படுமென அரசாங்கம் தெரிவித்துள்ளமை வெறும் கண்துடைப்பாகும். இதனை வைத்து ஐ.நாவில் கதை அளப்பதே அரசாங்கத்தின் குறிக்கோள். இவ்வாறான யுக்திகள் பற்றி உலக நாடுகளால் அறிந்துள்ளன. எல்லோரையும் எந்த நாளும்ஏமாற்ற முடியாதென தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.





மனித உரிமைகள் மீறல் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக புதிய ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றினை நியமிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு கூறினார்.





அவர் மேலும் தெரிவித்தாவது, குறித்த ஆணைக்குழுவிற்கு வழங்கியிருக்கும் அதிகாரங்கள் பற்றியோ அதில் அங்கம் வகிக்கும் நபர்கள் பற்றியோ எதுவுமே கூறப்பட்டதாகத் தெரியவில்லை என்றார்.