இராணுவ மயமாக்கலை நோக்கி நகர்கிறதா கோட்டா அரசு?

Politics 3 ஆண்டுகள் முன்

banner

இராணுவ பயிற்சி வழங்குவதை இராணுவ மயமாக்கலாக தொடர்பு படுத்துவது அர்த்தமற்றது. இராணுவ பயிற்சி வழங்குவது குறித்து ஆராய்வதில் தவறில்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல கூறினார்.





18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழக்கப்போவதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு கூறினார்.





அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் மேலும் கூறிய அவர்,





இராணுவப் பயிற்சி வழங்குவதால் நாடு இராணுவ மயமாக்கப்படுமா என வினவப்படுகிறது. அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளிலும் இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது. அந்த நாடுகள் இராணுவமயமாகியுள்ளதா என சிந்திக்க வேண்டும்.





இராணுவ பயிற்சி தொடர்பில் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.நாட்டு நிலைமை நிர்வாகம் என்பவற்றின் அடிப்படையில் இதற்கான தேவை குறித்து ஆராய்வதில் தவறு கிடையாது. உலகில் முன்னேற்றகரமான நாடுகள் மற்றும் ஜனநாயகம் முழுமையாக பின்பற்றப்படும் நாடுகளில் இராணுவ பயிற்சி வழங்கப்படுகிறது.





மறுத்தால் சிறைத்தண்டனை வழங்கவும் சட்டம் அந்த நாடுகளில் உள்ளன. இராணுவ பயிற்சி வழங்குவதை இராணுவ மயமாக்கலாக தொடர்பு படுத்துவது அர்த்தமற்றது என்றார்.