தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் சாத்தியமாகுமா?

banner

வடக்கு, கிழக்கு, மலையகம் மற்றும் தெற்கிலுள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கும் வகையில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியம் அமைக்கும் யோசனையை நல்லாட்சியின்போது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் முன்வைத்திருந்தார். எனினும், அத்திட்டம் கைகூடவில்லை. தற்போது அதற்கான முயற்சிகள் மீண்டும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.





தேர்தல் கூட்டணியாக அல்லாது குறைந்தபட்சம் நாடாளுமன்றத்துக்குள்ளாவது கூட்டணியாக செயற்படுவது தொடர்பில் ஆழமாக பரீசிலிக்கப்பட்டுவருகின்றது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் அண்மையில் கையளிக்கப்பட்ட மனுவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் உறுப்பினர்கள் கையொப்பமிட்டு இதற்கு சாதகமான பிரதிபலிப்பை வெளிப்படுத்தினர்.





ஓரணியில் செயற்படுவதன்மூலம் புதிய அரசியலமைப்பு உள்ளிட்ட விடயங்களின்போது அழுத்தங்களை பிரயோகிப்பதற்கு அது பெரும் பலமாக இருக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தற்போது வடக்கிலுள்ள தமிழ் தேசியக் கட்சிகள் ஓரணியில் திரண்டு செயற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றியமும் சாத்தியப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.





ஆனால் ஆளுங்கட்சி பக்கமுள்ள தமிழ் அரசியல்வாதிகளை இணைத்துகொள்வதா என்பது பற்றி இன்னும் கவனம் செலுத்தப்படவில்லை. நாடாளுமன்றத்தில் 28 தமிழ் எம்.பிக்கள் அங்கம் வகிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.