ஜனநாயகப் போராட்டத்தை சவாலுக்குட்படுத்துவது தவறு

Politics 3 ஆண்டுகள் முன்

banner

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான போராட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர்.மக்கள் ஜனநாயக முறையில் கொரோனா தொடர்பான சமூக இடைவெளியை கடைப்பிடித்து போராட்டத்தை மேற்கொண்டிருக்கின்றார்கள். ஆகவே இந்த போராட்டம் ஜனநாயக ரீதியில் இடம்பெற்ற ஓர் போராட்டம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.





மன்னாரில் உள்ள அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,





பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான ஆர்ப்பாட்டத்தில் மக்கள் எழுச்சியாக கலந்து கொண்டிருந்தனர். இந் நிலையில் போராட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள், பொது மக்கள், பாராளுமன்ற உறுப்பினர்களை பொலிசார் தேடித் தேடி விசாரிக்கின்றார்கள்.





மக்கள் புரட்சிகளை தடை செய்வதும் அவர்களை அச்சமூட்டுவதும் இந்த ஆர்ப்பட்டத்தில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்புரிமைகளை இல்லாது செய்கின்ற வன்முறையாகத்தான் பொலிஸாரின் நடவடிக்கை உள்ளது.





பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகள் எமக்கு தனித் தமிழீழத்தை பெற்றுத் தந்து விடும். ஏனெனில் ஐ.நா சபை தீர்மானம் நிறைவேற்றினால் இரண்டாக உடையும் என்று கூறியிருக்கின்றார். ஆகவே தமிழீழம் கிடைப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாகவே நான் கருதுகின்றேன்" - என்றும் அவர் குறிப்பிட்டார்.