" ஜனாதிபதி மிரட்டல் - எனது உயிருக்கு அச்சுறுத்தல்" - விஜயதாச ராஜபக்ச

banner

” கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் தொடர்பில் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எவ்வித விளக்கமும் வழங்கப்படவில்லை. இரகசியமாகவே அது கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, இச்சட்டமூலத்தால் நாட்டுக்கு ஏற்படும் பாதிப்புகளை நேற்று அம்பலப்படுத்தினேன். துறைமுக நகர் சீனாவின் கொலணியாகும் நிலையை தடுக்க வேண்டும் எனவும் கூறினேன்.





இன்று காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச எனக்கு அழைப்பை ஏற்படுத்தினார். கடும் சினத்துடன், மிகவும் கீழ்த்தரமாக என்னை விமர்சித்தார். அரச தலைவர் ஒருவருக்கு பொருத்தமற்ற விதத்தில் அவர் செயற்பட்டாலும். ஜனாதிபதி கையாண்ட பாஷையிலேயே நானும் பதில் கொடுத்தேன். ஜனாதிபதி இவ்வாறு அச்சுறுத்துவது பாரதூரம். உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபரிடமும் முறையிட்டுள்ளேன்.”





இவ்வாறு ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் விஜயதாச ராஜபக்ச இன்று தெரிவித்தார். விஜயதாச ராஜபக்ச இன்று காலை நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின்போது தெரிவித்த கருத்துகள் காணொளி வடிவில்......






https://www.youtube.com/watch?v=c5y55froS2Q