'இலங்கைக்குள் தனி நாடு உருவாகாது'

Politics 3 ஆண்டுகள் முன்

banner

கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம்' ஊடாக மேற்கொள்ளப்படவுள்ள மாற்றங்களால் இலங்கைக்குள் மற்றுமொரு தனி நாடு உருவாகாது - என்று இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.





கொழும்பு துறைமுக நகர பொருளாதார வலய ஆணைக்குழு சட்டமூலம் நிறைவேறினால் இலங்கை சீனாவின் கொலணியாக மாறிவிடும் எனவும், தனி நாடு உருவாகும் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.





இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" கொழும்பு துறைமுக நகர் வேலைத்திட்டம் குறித்து நாம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்களால் இலங்கைக்குள் தனி நாடு நிர்மாணமாகாது. இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்கள், கொழும்பு துறைமுக நகரில் முதலிடும் தரப்புக்கு பொருந்தாது எனக் கூறப்படுவதும் பொய். அவ்வாறு இந்த அரசு செயற்படாது.





அத்துடன், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குறித்த பகுதி சீனாவின் தீவாகா மாற்றம் பெறாது. அதேபோல சீனாவுக்கு மட்டும் முதலீடு வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இவ்விடயத்தில் நாட்டின் அரசமைப்பு, சட்ட கட்டமைப்பு, சுயாதீனம், ஒருமைப்பாட்டுக்கு எதிராக நாம் செயற்படவில்லை. செயற்படபோவதும் இல்லை." - என்றார்.