21/4 தாக்குதல் - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

banner

21/4 தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் சட்டமா அதிபரால் வழக்கு தொடுக்கக்கூடியதாக இருக்கும் - என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர நேற்று தெரிவித்தார்.





கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில், 21/4 தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகள் தேக்கமடைந்துள்ளனவா என எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,





" 21/4 தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எந்தவிதத்திலும் ஸ்தம்பிதமடையவில்லை. அத்தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட அனைத்து குற்றவாளிகளுக்கு எதிராகவும் இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் சட்டமா அதிபரால் வழக்கு தாக்கல்செய்யக்கூடியதாக இருக்கும்.





அமெரிக்காவின் நடைபெற்ற செப்டம்பர் 11 தாக்குதலுடன் தொடர்புபட்ட பிரதான சூத்திரதாரிக்கு எதிராக 18 ஆண்டுகள் கடந்தும் இன்னும் வழக்கு தொடுக்கப்படவில்லை. லக்‌ஷ்மன் படுகொலையுடன் தொடர்புபட்டவருக்கு வழக்கு தொடுப்பதற்கு மூன்று ஆண்டுகள் சென்றன.





21/4 தாக்குதல் நடைபெற்று ஈராண்டுளே கடந்துள்ளன. எனினும், இன்னும் ஒரிரு வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சட்டமா அதிபரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்த குறைபாடுகளில் 75 வீததத்தை நிவர்த்தி செய்து அனுப்பியுள்ளோம். இது விடயம் தொடர்பில் சட்டமா அதிபருடன் பணியாற்றுவதற்காக சி.ஐ.டி மற்றும் ரி.ஐ.டியைச் சேர்ந்த 54 அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்." - என்றார்.